மீடியாகொட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழப்பு.!

0
154

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், உணவக உரிமையாளர் ஒருவரின் மனைவியே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட மஹதுர நளீன் என்பவரின் சகோதரிக்கே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரந்தெனிய சுத்தாவின் மச்சான் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்காக பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் சந்தேகிப்பதுடன், இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.