இளம் தாயை தீ வைத்து கொன்ற 13 வயது சிறுமி.. இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

0
227

பதுளையில் தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுமி ஒருவர் தனது தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று (16) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமி எகொடவெலவைச் சேர்ந்த 13 வயது மாணவி என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த 4 ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.