கடலில் நீராடச் சென்ற அக்கரபத்தனை இளைஞன் உயிரிழப்பு.!

0
109

நேற்று (16) மாலை கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவில் காலி முகத்திடல் கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் கோட்டை பொலிஸார் கடற்படையினருக்கு அறிவித்து நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அக்கரபத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

இவருடைய உடல் தற்போது கொழும்பு பொரளை வைத்தியாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரோடு கடலில் நீராட சென்ற மற்றுமொருவர் உயிர் பிழைத்து வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியதில் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த உயிரிழப்புகள் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.