இந்தியாவில் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3000 கிலோகிராம் அமொனியம் நைட்ரைட் வெடிமருந்து வெடித்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் நடத்திய சோதனையில் பரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட 3000 கிலோகிராம் அமொனியம் நைட்ரைட் வெடிமருந்து ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முஸமில் ஷகீல் கனியா என்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த சூழலில் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழு, பொலிஸார் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
A massive explosion was caught on CCTV near Nowgam, Srinagar, on Friday. Fire brigade, ambulances, and senior police rushed to the site.
Further details are awaited. pic.twitter.com/LWPpHm8HKk
— IndiaWarMonitor (@IndiaWarMonitor) November 14, 2025










