இந்த வரவு செலவுத் திட்டம் ஏழைகளிடம் இருந்து பெற்று செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது – நாமல் ராஜபக்ஷ.!

0
22

கடந்த கால வரவு -செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடம் இருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது, ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் ஏழைகளிடம் இருந்து பெற்று செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எம்.பி. நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார கடந்த காலங்களில் எதிர்க்கட்சி எம்.பி.யாக பாராளுமன்றத்தில் பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து சுமார் 4.30 மணித்தியால வரலாற்று சாதனையான உரையை நிகழ்த்தினார் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இந்த வரவு – செலவுத் திட்டத்தில் வரலாற்று சாதனை மிக்க என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய வேண்டும்.

2025 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை.

பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு மக்கள் தான் எதிர்ப்பு தெரிவித்தனர் . ஜனாதிபதி அநுரகுமார கடந்த காலங்களில் எதிர்க்கட்சி எம்.பி.யாக பாராளுமன்றத்தில் பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு, நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். உங்களைப் போன்று வைராக்கியத்துடன் செயல்பட போவதில்லை .அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதம் அளவிலேனும் நிறைவேற்ற முயற்சியுங்கள் என்றார்.