2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு; அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – ஜனாதிபதியின் மகிழ்ச்சி செய்தி.!

0
138

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்….

  • நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம் ஸ்தீரத்தன்மையில் இருக்கிறது.
  • பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேசிய வருமானம், அரச நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
  • உலக நாடுகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்ற போதிலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை.
  • இந்த வருட இறுதிக்குள் அந்திய செலவாணி 7 வீதமாக அதிகரிக்கும் .
  • 2030 ஆம் ஆண்டுக்குள் பொதுக் கடனை 87% ஆகக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
  • வருமானம் குறைந்த மக்களுக்கு அஸ்வெசும திட்டத்தை முன்னெடுப்பதுடன், 2026 ஆம் ஆண்டு மீண்டும் அஸ்வெசும பெறுவோரை மீளாய்வு செய்யவுள்ளோம்.
  • சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து, நாட்டுக்கு தேவையான பிரதி பலன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
  • அரச நிறுவனங்கள் மற்றும் அரச சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாட்டின் சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு ஈ சேவை அறிமுகப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
  • 2026 மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
  • அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே 3 கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிப்பதன் மூலம் பொருளதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.
  • 2025 ஆம் ஆண்டு 823 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
  • 2026 ஆம் ஆண்டு அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம்.
  • குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது என்னை ஹிட்லர் என்று விமர்ச்சிக்கின்றனர்.
  • மக்களுக்கு எதிராக யாரேனும் தவறு இழைத்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்படும். யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாது.
  • நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொருளாதார பிரதிபலன்கள் சமமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் முக்கிய நோக்கமாகும்.
  • ஏற்றுமதியை இலக்காக கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்.
  • 2025 ஆம் ஆண்டு 430 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் பெறப்பட்டுள்ளது.
  • எவரும் கடனை செலுத்துவது தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை.
  • 2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
  • பொய்யான பரப்புரைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.
  • கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தேசிய கடன் சேவை 760 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
  • 2028 ஆம் ஆண்டிலும் நாங்களே ஆட்சியில் இருப்போம் நாங்களே கடனை செலுத்துவோம்.
  • 2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடம் இதுவரை 1373 மில்லியன் டொலர் வரை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
  • கிராமிய வறுமையை நீக்குவதற்கு தேசிய வருமானத்தின் பிரதிபலன்களை கிராமிய மட்டங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்போம்.
  • டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். அதற்கு பல்வேறு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அரச ஏற்றுமதி 4 சதவீத்தால் அதிகரிப்பதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
  • வேலையின்மை 4.5 இல் இருந்து 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.
  • கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு பங்குச் சந்தைகள் பாரிய வளர்ச்சியை காண்பித்துள்ளன.
  • அரசியல் தலைவர்கள் தவறுகள் இழைத்தால் மக்களே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாட்டை உருவாக்கியுள்ளோம்.
  • அனைவரும் தங்களுடைய ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி செலுத்தும் சூழலை உருவாக்கியுள்ளோம். அதனாலேயே வரி வருமானம் அதிகரித்துள்ளது.
  • நேரடி மற்றும் மறைமுக வரி 75 – 25 சதவீதத்தில் இருந்து 40 – 60 சதவீதம் வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கொழும்பு துறைமுக சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் சர்வதேச முதலீடுகள் இலங்கையில் இருந்து கை நழுவிச் செல்வதை தடுக்க முடியும்.
  • அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு தேசிய உற்பத்தியை 20 சதவீதமாக முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை.
  • முதலீடுகளை பாதுகாக்கும் நோக்குடன் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
  • நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது – ஜனாதிபதி
  • பணவீக்கத்தை 5 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • முதலீட்டாளர்கள் கொண்டுவரும் முதலீடுகளுக்கு ஏற்ப வதிவிட வீசா வழங்கும் முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
  • முதலீட்டு வலயங்களுக்கு அண்மித்த சேவைகளுக்காக மேலும் 1000 பில்லின் ரூபாய் ஒதுக்கீடு.
  • காணி தகவல் உள்ளிட்ட மத்திய டிஜிட்டல் சேவைக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • திகன மற்றும் நுவரெலியாவை மையப்படுத்தி புதிய இரண்டு தொழிநுட்ப முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
  • தேசிய ஏற்றுமதி வளர்ச்சிக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • தேசிய தனி பொருளாதார மையம் உள்ளிட்ட முதலீடுகளுக்காக 2500 மில்லியன் ரூபாய்.
  • தொழிற்சாலை வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.