மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்த இராணுவ சிப்பாயை கொ.ன்.ற மற்றுமொரு சிப்பாய்.!

0
83

தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாயை மற்றொரு இராணுவ சிப்பாய் வெட்டிக் கொன்ற சம்பவமொன்று மகாஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மகா ஓயாவின் பொரபொல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அம்பாறை மல்வத்த முகாமில் பணியாற்றும் (21) இராணுவ வீரர் ஆவார்.

மின்னேரியா ராணுவ முகாமில் பணியாற்றும் (24) இராணுவ வீரர் ஒருவர் இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட இராணுவ வீரர், சந்தேக நபரான இராணுவ வீரரின் மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகவும், தான் வீட்டில் இல்லாத போது சந்தேக நபரின் மனைவியுடன் அந்த நபர் (மரணம் அடைந்தவர்) அறையில் இருந்த போது வீட்டுக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வீட்டுக்கு வந்த போது, ​​அதைக் கண்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒரு கத்தியால் இராணுவ வீரரை வெட்டிக் கொன்றுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.