வவுனியா பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு.. பகிடிவதையா காரணம்.?

0
111

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஆவார்.

மேலும் மரணத்திற்கான சரியான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிந்தைய விசாரணையில் வெளிப்படும் என கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொண்டு வருகின்றனர். (adaderanatamil)