யாழில் 185 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.!

0
115

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, கேரள கஞ்சா தொகையைக் கொண்டுசென்ற டிங்கி படகுடன் இரு சந்தேகநபர்களைக் கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதன்போது 185 கிலோ 600 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகையொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு’ மற்றும் ‘போதைப்பொருள் இல்லாத நாடு – ஆரோக்கியமான பிரஜைகளின் வாழ்க்கை’ என்ற இலக்குக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தச் சந்தேகநபர்கள், கேரள கஞ்சா தொகையுடன் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் சந்தை மதிப்பு 41 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.