இலஞ்சம் பெற்ற குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது.!
குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்,ரூபா 5 இலட்சம் இலஞ்சம் பெற்ற போது இன்று(31) காலை 11.30 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடம்போடை என்ற கிராமத்தில் உள்ள அரச காணி ஒன்றிற்கான அளிப்பு பத்திரம் பெற்றுத் தருவதாக கூறி இப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பிரதேச சபைத்தலைவர் இன்று காலை குச்சவெளி பிரதேச சபையில் உள்ள தமது அலுவலகத்தில் வைத்து இலஞ்ச பணத்தை பெற்றுள்ளார்.
அதனை அடுத்து குறித்த காணிக்கு பணம் பெற்றவருடன் இவர் சென்ற போது அங்கு வைத்து கைது செய்யப்பட்டார். தற்போது நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இவர் அங்கு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.









