ஈரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான குணசேகரம் மரியதாஸ் (வயது-30) என்ற இளம் குடும்பஸ்தராவார்.
உடல் நலக்குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் 14 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பருத்தித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்.









