யாழ்ப்பாணம் காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவருக்கு நேற்று முன்தினம் (23) காலை 3-4 தடவைகள் மூக்காலும் வாயாலும் இரத்தம் வந்தது.
இதனையடுத்து அவர் வலந்தலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுமார் 10 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
அவரது சடலத்தின் மீது திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மரண விசாரணை மேற்கொண்டார்.
உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.










