30 கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது..!

0
2

பதுளை – மஹியங்கனை பகுதியில் 30 கஜமுத்துக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை வனஜீவராசிகள் பாதுகாப்ப திணைக்கள அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்த கஜமுத்துக்களை 30 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட காலமாக கஜமுத்துக்களை விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த வனஜீவராசிகள் பாதுகாப்ப திணைக்கள அதிகாரிகள் நடவடிக்க எடுத்துள்ளனர்.