15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த சிறுமி, வியாழக்கிழமை (16) அதிகாலை, தனது வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். அச்சிறுமியை பெற்றோர் தேடிச் சென்ற நிலையில், வீதியில் இளைஞன் ஒருவன் நின்றிருந்துள்ளார். அவரை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.