கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவில் இஷாரா செவ்வந்தி..!

0
5

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களையும் ஏற்றிய விமானம் நேற்று இரவு (15) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கிஹான் சந்திம ஆகியோர் நேபாள பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.