கைதான இஷாரா செவ்வந்தி கூறியது..!

0
4

குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு குற்றவாளிகளிடம் தற்போது மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

இதன்போது, இஷாரா செவ்வந்தியிடமிருந்து சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இலங்கை பொலிஸ் குழுவொன்று அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல உள்ளிட்ட நான்கு அதிகாரிகளால் குறித்த குற்றவாளிகள் குழுவினர் ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

குற்றவாளிகளை ஏற்றி வந்த விமானம் நேற்று (15) மாலை 6.52 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள் பலத்த பாதுகாப்பின் கீழ் பல பொலிஸ் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதன்படி, இஷாரா செவ்வந்தி, டுப்ளிகேட் இஷாரா என்ற தக்‌ஷி, ஜே.கே. பாய் மற்றும் ஜஃப்னா சுரேஷ் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கம்பஹா பாபா என்பவர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும், நுகேகொடை பபி என்பவர் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேவேளை, இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்…

“கணேமுல்ல சஞ்சீவவை சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு வந்திருந்தபோது, நான் ஒரு சட்டத்தரணி என்று நினைத்து ஒரு பெண் தனது வழக்குக்காகப் பேசும்படி என்னிடம் கேட்டார்.

கொமாண்டோ சமிந்துவுடன் கணேமுல்ல சஞ்சீவவை சுடுவதற்கு வந்த நேரத்தில், நான் சட்டத்தரணிகளுக்கான ஓய்வறையில் இருந்தேன். அப்போது மிகவும் அப்பாவித் தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் பேசினார்.

அவர் என்னை ஒரு சட்டத்தரணி என்று நினைத்திருக்கிறார். அப்பெண்ணின் கணவர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார், அது தொடர்பான வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அவர் என்னிடம், ‘மேடம், என்னிடம் கஷ்டப்பட்டு சேர்த்த செய்த ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது. இதை எடுத்துக்கொண்டு என் வழக்குக்காக வாதாடுவீர்களா?’ என்று கேட்டார். அந்த நேரத்தில் எனக்கு அப்பெண்ணைப் பற்றி மிகவும் வருத்தமாக இருந்தது.”

“நான் அவரிடம், ‘நான் வேறு ஒரு வழக்குக்காக வந்திருக்கிறேன். அதனால், உங்கள் வழக்கை அங்கே இருக்கும் மேடத்திடம் கொடுங்கள்’ என்று கூறினேன்.

அவ்வாறு கூறி, என் கண்ணுக்குத் தெரிந்த வேறொரு பெண் சட்டத்தரணியிடம் அவரை அனுப்பினேன்.

அப்பெண் அந்த சட்டத்தரணியிடம் சென்று தனது கதையைக் கூறினார். அந்த சட்டத்தரணி வழக்குக்கு ஆஜராவதற்கு 2000 ரூபாய் கேட்டார்.

அப்பெண் மிகவும் பரிதாபமாக என்னைப் பார்த்தார். நான் அவரை அறைக்கு வெளியே அழைத்து, என்னிடம் இருந்த 5000 ரூபாயைக் கொடுத்து, அந்த மேடத்தை வழக்குக்காக அமர்த்திக்கொள்ளச் சொன்னேன்.

அவர் என் இரு கைகளையும் பிடித்து வணங்கி பணத்தை வாங்கிக்கொண்டார்.” என தெரிவித்துள்ளார்.