யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் தற்கொலை.!

0
5

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவர், தவறான முடிவெடுத்து நேற்று (10) தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்…

அவர் நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தவர்களின் அறிவிப்பின் பேரில் அச்சுவேலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர். ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் பதிவு செய்தனர்.