இங்கினியாகல – கொக்னஹர பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.
இதன் போது புதையல் தோண்டிக் கொண்டிருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் காணப்பட்ட தண்ணீர் எடுக்கும் இயந்திரம், மின்சாரம் வழங்கப் பயன்படுத்தப்படும் மின் கேபிள்கள், பூஜை பொருட்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல நாட்களாக இந்த செயற்பாட்டில் ஈடுபட்ட வருவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்கினியாகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.