பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் உயர் பாதுகாப்பு குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் 29 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை புலனாய்வு மற்றும் தந்திரோபாயப் பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின் போது இந்தத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட வார்டுகளில் கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள “தெமட்டகொட சமிந்த” தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான “வெலே சுதா” மற்றும் “மிதிகம ருவான்” ஆகியோரின் அறைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.