முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் வைத்து கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரால் 100 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை 07.10.25 அன்று கைதுசெய்துள்ளார்கள்.
மன்னார் மாவட்டத்தினை சேர்ந்தவர் இவர் பொலீஸ் சேவையில் இணைந்து கொண்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றியுள்ள நிலையில் தற்போது வெலிஓயா பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார்.
இவர் தற்போது பொலீஸ் சேவையினை மக்களுக்காக வழங்கிவருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்தபோது இவரை சந்தேகத்தில் சோதனை செய்த சிறப்பு அதிரடிப்படையினர் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் வைத்து கைது செய்துள்ளார்கள்.
உடமையில் 100 கிராம் ஜஸ் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.