நெடுங்கேணி பகுதியில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
78

நேற்று 05.10.1015 மாலை நெடுங்கேணி முல்லைத்தீவு வீதியியில் நெடுங்கேணி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்த கணவன் மனைவி இருவருமே விபத்தினை சந்தித்துள்ளார்கள், இவர்கள் வீதியில் நின்ற கால்நடையுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது 17ஆம் கட்டை நெடுங்கேணியினை சேர்ந்த 69 அகவையுடைய கறுப்பையா செல்வக்குமார் என்பவன் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.