சட்டவிரோத தங்கக் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களும் தங்கக் தொகையும் கைது செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ 454 கிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த தங்கத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மீன்பிடி வலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஈயமாக இந்த தங்கக் தொகை சூட்சுமமாக கொண்டு செல்ல தயார்ப்படுத்தப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் சந்தேக நபர்கள் கற்பிட்டி ஏலத் தோட்டம் மற்றும் ஆனவாசலை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.