ஒரு கோடி பெறுமதியான ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பொருட்களுடன் சிக்கிய இருவர்.!

0
107

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் நான்கு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 26 ஸ்மார்ட் போன்கள், 10 ஐபேட்கள், 10 டெப்கள், 3 மடிக்கணினிகள், பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசேதகர் டி.பி.எஸ். கல்யாணதுங்கவுக்கு கிடைத்த தகவலின்படி, மாளிகாவத்தை ரம்யா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு வீட்டிலிருந்து இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த 30 ஆம் திகதி டுபாய்க்குச் சென்ற சந்தேகநபர்கள், நேற்று (2) நாடு திரும்பியபோது, ​​இந்தப் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாளிகாவத்தை மற்றும் கொச்சிக்கடை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.