உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை வெள்ளிக்கிழமை (03) மூடப்படும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி உலக மது ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
எனவே நாளைய தினம் மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.