ஹெரோயினுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.!

0
118

உடப்புவ பொலிஸில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (30) 400 கிராம் ஹெரோயினுடன் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் இருந்த பேலியகொடைப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடமிருந்து சுமார் 110 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

பொலிஸ் தகவல்களின்படி, கடவத்தை எல்தெனியப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த பொலிஸ் அதிகாரி கொழும்பு குற்றப்பிரிவில் சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றி இந்த ஆண்டு உடப்புவ பொலிஸுக்கு மாற்றப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் டுபாயில் தலைமறைவாக உள்ள ரஸல் ஸ்மித் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.