வெப்பமான வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

0
120

இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்ப அளவு கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பமான வானிலை, உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது