முதல் முறையாக இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள போதைப்பொருள்.!

0
146

கடந்த 21 ஆம் திகதி வெலிகமவில் கைது செய்யப்பட்ட மோல்டோவா நாட்டவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருள் ‘மெபெட்ரோன்’ (‘Mephedrone’) என்ற போதைப்பொருள் என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த போதைப்பொருளானது ஐஸ் ரக உள்ளிட்ட போதைப்பொருட்களையும் விட மிகவும் ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருளானது முதல் முறையாக இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.