எத்திமலை வாவியில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
127

மொனராகலை எத்திமலை பொலிஸ் பிரிவில் டோசர் ஏரியில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டோசர் ஏரியில் குளிக்கச் சென்ற ஒருவர் காணாமல் போனதாக எத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டையடுத்து குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறிப்பிடப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் காணமால் போன நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எத்திமலை வாவி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் எத்திமலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.