மலையகத்தில் வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்ப்பு.!

0
175

வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த (62) வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் பின்புறமாக தோட்டத்தில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்ட நிலையில் அவர் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என பல கோணங்களில் வட்டவளை பொலிஸாருடன் ஹட்டன் தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.