களுவாஞ்சிக்குடியில் பெண் ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

0
144

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உயிரிழந்தவர் கோட்டைக்கல்லாறு பகுதிணை சேர்ந்த 57 வயதுடையவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.