பொகவந்தலாவ கொட்டியாகலை என்.சி.தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 13 பேர் வைத்தியசாலையில் இன்று (20) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களே இன்று பிற்பகல் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.