மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
112

மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் நேற்று இச் சம்பவம் இடடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் துறைநீலாவணை கிராமத்தினை சேர்ந்த 41 வயதான வினாசித்தம்பி தியாகராசா என பொலிஸார் தெரிவித்தனர்.

உறவினரின் வீட்டில் இருந்து அயலில் உள்ள வீட்டுக்கு மின்சாரத்தினை வழங்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கியவரை உறவினர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொன்டு செல்லும் போது உயிழந்துள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிபொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.