மடுமாதா தேவாலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞனுக்கு நடந்த சோகம்.!

0
156

மல்வத்து ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தந்திரிமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் உறவினர்களுடன் இணைந்து மடுமாதா தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வழிபாடுகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது நீராடுவதற்காக மல்வத்து ஓயாவுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இளைஞனும் உறவினர்களும் இணைந்து மல்வத்து ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த போது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.