நீரில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
191

கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இறந்தவர் தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.

இறந்த சிறுவன் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோது இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

பின்னர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு கலேவெல வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும், அவர் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.