துப்பாக்கி வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
190

வலஸ்முல்ல – ரதனியார பகுதியில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்தார்.

இறந்தவர் 32 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

கட்டுத்துப்பாக்கியுடன் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாயையும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.