85 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது.!

0
25

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 8.542 கிலோகிராம் குஷ் போதைப்பொருளைக் கடத்த முயன்ற இந்தியர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டார்.

நேற்று (13) காலை 09.45 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவர், இந்தியாவின் மதுரைக்கு புறப்படுவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வரும் வரை விமான நிலையத்தில் தங்கியிருந்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரது பொதிகளை ஸ்கேன் செய்தபோது சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டறிந்தனர்.

அருகில் பணியில் இருந்த “ரெண்டி” என்ற பொலிஸ் நாய் பையை மோப்பம் பிடித்து போதைப்பொருள் இருப்பதாக சைகை காட்டியது.

பரிசோதனையில், 16 பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 8.542 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இந்தியர் மற்றும் போதைப்பொருள்கள் நாளை (14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்பு உத்தரவு பெறப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக தலைமையகத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளன.