74 வயது தாயும் 25 மகனும் ப.டு.கொ.லை – சிக்கிய கொடூரன்.! Video

0
18

தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் நேற்று (11) ஒரு பெண்ணும் ஆணும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கொட்டவெல, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 மற்றும் 25 வயதுடைய தாயும் மகனும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் எல்பிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 43 வயது சந்தேக நபர், கொலை செய்யப்பட்டவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பவர் என தெரியவருகிறது.

எனினும், கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.