காலியில் மெதம்பாகம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் நேற்று மாலை ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் காலி – பூஸா பிரதேசத்தைச் செர்ந்த 68 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ரயில் கடவையை கடக்க முயன்ற போது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.