ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு.!

0
33

அநுராதபுரம் – தம்புத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் ஆவார்.

இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஓய்வு பெற்ற விமானப்படை வீரருக்கம் உறவினர் ஒருவருக்கும் இடையில் நீண்ட காலமாக தகராறு ஏற்பட்டு வருவதாக அவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழந்து நீண்ட நாட்கள் ஆகியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.