மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி – 2 பெண்கள் உட்பட மூவர் கைது.!

0
56
Common photo

பேலியகொடை நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 பெண்கள் உட்பட மூன்று பேர் பேலியகொடை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (09) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.

பன்வில மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 45 வயதுடைய இரண்டு பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.