கிணற்றில் தவறி விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
78

இரத்தினபுரியில் கல்தொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்டெம்யாய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நண்பர்களுடன் இணைந்து கிணற்று நீரை அகற்றி சுத்தம் செய்யச் சென்றிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கல்தொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.