எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு.!

0
309

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 19 பேர் காயமடைந்திருந்தனர்.