மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா – வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.
மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவட்டவான், செறுவாமுனை கிராமத்தில் வசிக்கும் பிறைசூடி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) கிரிஜா ஆகியோரின் புதல்வியாவார்.