யாழ் வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியில் தாயின் வயிற்றில் ஐந்து மாத கருவாக இருந்த போது தந்தை வல்லை வெளியில் வாகன விபத்தில் உயிரிழந்தார்.
தாயார் ஒரு ஆசிரியர் தனது வீட்டில் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தார், தாயின் சகோதரர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் வறுமையிலும், அயலவர்கள் தமது பிள்ளைகளை அயற்கிராம பாடசாலைகளில் சேர்த்த போதும் தனது மகளை யா/ அல்வாய் அம்பாள் வித்தியாலயத்தில் சேர்த்து கல்வி கற்பித்து வந்தார்,
பாடசாலை, கோட்டம், வலய மாவட்டம் மாகாணம் மட்ட போட்டிகளிலும் முதலிடம் பெற்ற பிரசன்னா ரஸ்வீனா தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து தாயாருக்கும், பாடசாலைக்கும், அல்வாய் மண்ணுக்கும், உறவுகளுக்கைம் பெருமையை தேடித் தந்திருப்பதுடன் தாயாரின் முயற்சியினால் கஷ்டங்கள் துயரங்களை கடந்து சித்தியடைந்துள்ளார். (FB)
குறித்த மாணவிக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.