யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு – சாந்தையைச் சேர்ந்த ஜெயந்தன் – வினிஸ்ரலா தம்பதிகளின் ஐந்து நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தை கடந்த 1ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்…
குறித்த குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ள நிலையில் ஐந்து நாட்களின் பின்னர் கடந்த 01ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சுவாசக் குழாய் மற்றும் இருதயத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.