வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
2025 செப்டம்பர் 2 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, செப்டம்பர் 3 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.