தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
61

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், 307,951 பேர் பரீட்சைக்கு தோற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களில் 901 விசேட தேவையுடைய மாணவர்களும் அடங்குவர். அவர்களில் 12 பேர் பிரெய்லி ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தினார்கள்.

பரீட்சை முடிவுகளை உடனடியாக வெளியிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சைகள் திணைக்களம் எடுக்கும் எனவும், தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு போதுமான நேரம் வழங்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் உறுதியளித்தார்.