ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்.! Video

0
65

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு 6.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் இதுவரை 250 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்ப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.