தாதியை தாக்கி விட்டு தப்பிச் சென்ற நோயாளி.!

0
64

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலை நடத்திய நோயாளி கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவர் மது போதையில் இருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.