முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) காலை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க. எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். (Video-Newsfirst)